அவ்லியாக்களிடம் அல்லாஹ் பேசுவானா? அவர்களுக்கு வஹீ வருமா? என்று என்று பீஜே அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் நடைபெற்ற சேப்பாக்கம் பொதுக் கூட்டத்தில் பீஜே கேள்வி எழுப்பினார்.
இதை கட் பண்ணி போட்டு பீஜே குர்ஆனை மறுக்கிறார் என்று வெளியிடப்பட்ட ஒரு மறுப்பு வீடியோ நம் பார்வைக்கு வந்தது.
அந்த வீடியோவைக் காண:
மூஸா நபியின் தாயாரிடம் அல்லாஹ் பேசியுள்ளதாகவும், அவருக்கு வஹீ வந்ததாகவும் அல்லாஹ் கூறுகிறான். ஆனால் பீஜேயின் இந்தக் கேள்வி அந்த வசனங்களை மறுப்பதாக அமைந்துள்ளது என்று அந்த மறுப்பு வீடியோ கூறுகிறது.
ஆனால் இவர்கள் இப்போது எழுப்பும் கேள்விக்கு 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி பீஜே தெளிவான விளக்கம் அளித்துள்ளார். அந்தப் பதில் இவர்கள் ஐந்து ஆண்டுக்குப் பின் இப்போது எழுப்பும் கேள்விக்கும் பதிலாக அமைந்துள்ளது.
நமது ஆன்லைன் பீஜே இணைய தளத்தில் மேற்கண்ட தேதியில் பீஜே அளித்த பதில் இதுதான்.