இன்றைய சூழலில் யாராலாம் தவிர்க்க முடியாத கருவியாக இருப்பது கணினி. இதன் பிள்ளைகளாக பிறப்பெடுத்த மடிக் கணினி (Laptop), தொடுதிரை ஃபோன்கள், டேப்லெட்கள் (Tablet) போன்றவை நமது வாழ்வியலை அதன் வலைக்குள் (Internet) வசதியாக சிக்கவைத்துவிட்டன என்று தான் கூற வேண்டும்.
அதிகமான டென்சன் சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்யுமாம் – அதிர்ச்சி தகவல்! சராசரியாக நமது அன்றாட பழக்கவழக்கங்களில் பெரும்பாலானவை இதை சார்ந்து தான் இருக்கின்றது. இவ்வாறு நாம், கணினியோடு உறவாடிக் கொண்டிருப்பதால் நமது உடல் நலத்திற்கு பல எதிர்வினை விளைவுகள் ஏற்படுகின்றன.
இனி, உங்கள் நினைவுகளை ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் – ஆராய்ச்சியில் கண்டுப்பிடிப்பு!!!அதிலும், கணினியில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவை ஏற்படுத்துகிறது என்ற அபாயத்தை அறிந்தும் நாம் அதை விட்டு விலகுவதாய் இல்லை. இனி, அதிகமாக கணினி உபயோகப்படுத்துவதனால் ஏற்படும் மோசான உடல்நலக் கோளாறுகள் பற்றிப் பார்க்கலாம்….
தசைக்கூட்டுச் பிரச்சினைகள் கணினியை தினமும் தொடர்ச்சியாக பயன்படுத்துபவர்களுக்கு, தசை வேதனை மற்றும் தசை சோர்வு, தோள்பட்டை வலி, தண்டுவட வலி மற்றும் இடுப்பு வலி போன்றவை மிக சாதாரணமாக ஏற்படுகிறது. இதற்கு காரணம் அவர்கள் ஒரே இடத்தில உட்கார்ந்தபடி வேலை செய்வது தான். இதில் இருந்து தீர்வுக் காண, அவ்வப்போது வேலைகளுக்கு இடையே இடைவேளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அழுத்தம் சார்ந்த வலிகள் கைகளை ஒரே நிலையில் வைத்து வேலை செய்வதனால் ஏற்படும் அழுத்தம் காரணமாக, தோள்பட்டை, கழுத்து, மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை முதல் விரல்கள் வரை இடைப்பட்டு வலிகள் ஏற்படுவது, தசை வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வுக் காண அவ்வப்போது கைகளை அசைத்து, கைகள், தோள்பட்டை, மணிக்கட்டு போன்றவற்றை மென்மையாக சுழற்றி பயிற்சி செய்யலாம்.
கண்பார்வை கோளாறுகள் கண் கூசுதல், எரிச்சல், பார்வையில் குறைபாடு, கண் வறட்சி, இமைகள் துடித்துக் கொண்டே இருப்பது போன்ற கோளாறுகள் கணினியை ஓயாது பயன்படுத்துவதனால் ஏற்படுகிறது. இதை சரி செய்ய, உங்கள் கண் பார்வைக்கு ஏற்ப கணினியின் திரையில் உள்ள அமைப்புகளை (Settings) சரி செய்து வைத்துக் கொள்ளலாம்.
தலை வலி அதிகப்படியான தோள்பட்டை மற்றும் கழுத்து வலியின் காரணமாக தான் தலை வலி ஏற்படுகிறது. மற்றும் ஓயாத வேலை, மன அழுத்தமும் சேர்ந்து தலை வலியை அதிகரிக்க செய்கிறது. இதில் இருந்து விடுபட ஒரே வழி தான் இருக்கின்றது. ஒரு வாரம் விடுப்பு போட்டுவிட்டு, எங்காவது குடும்பத்தினருடன் வெளியிடத்திற்கு சென்று வாருங்கள்.
உடல் பருமன் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வதனால் ஏற்படும் மிகப்பெரிய உடலநலக் குறைபாடு என்பது, உடல் பருமன் அதிகரித்தல். இது குழந்தைகளை கூட பாதிக்கிறது என்பது தான் கொடுமையிலும் கொடுமை. இதில் இருந்து தீர்வுக் காண ஒரே வழி, கணினியின் முன் நீங்கள் வேலை செய்யும் நேரத்தை குறைத்துக் கொள்வது தான்.
மன அழுத்த கோளாறுகள் தினமும் கணினியில் பணிபுரிபவர்களுக்கு ஏற்படும் மிகவும் அபாயமான உடல்நலப் பிரச்சனை என்றால் அது, மன அழுத்தம் தான். மன அழுத்தத்தின் காரணமாக தான் பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. முக்கியமாக இரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய் போன்றவை அதிகரிப்பதற்கு காரணமே இந்த மன அழுத்தம் தான்.