சென்னை: பொதுத் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் விடைத்தாளில் கோடிட்டு அடித்தால், அடுத்த 2 பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு நடக்கும் பொதுத்தேர்வுகளில் பங்கேற்கும் நன்றாகப் படிக்கும் மாணவர்கள், தங்கள் எழுதிய விடைகள் தவறு என்று தெரிந்தால் அதனை கோடிட்டு அடித்து விட்டு அடுத்து நடக்கும் உடனடி சிறப்புத் தேர்வில் பங்கேற்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதிக மதிப்பெண்கள் எடுக்கவே மாணவர்கள் இவ்வாறு செயல்படுவதாகவும் புகார்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டது.

மாணவர்களின் இந்த செயலைக் கண்டித்துள்ள பள்ளிக் கல்வித்துறை, விடைத் தாள்களில் கோடிட்டு அடிக்கும் மாணவர்கள் 2 பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது என்று அறிவித்துள்ளது. மேலும், இதுகுறித்த விழிப்புணர்வினை பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.