தற்போது அதிகப்படியான வேலைப்பளுவினால், பலருக்கு டென்சனும், மன அழுத்தமும் அதிகரித்து, இதனால் இதயம் பலவீனமாக உள்ளது. அதனால் எந்நேரம் வேண்டுமானாலும் இதய நோயால் திடீர் மரணம் கூட ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே வாழ்க்கை முறையில் சிறு மாற்றத்துடன், மனதை அமைதியாக வைத்துக் கொள்ளும் செயல்களை மேற்கொண்டு, இதயத்தின் வலிமையை மேம்படுத்தும் உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால், இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.
இப்படி இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால், ஆயுட்காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம். சரி, இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!
நெல்லிக்காய் காலையில் தினமும் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வரலாம். அப்படி வெறும் வயிற்றில், நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால், கொழுப்புக்கள் கரையும். அதிலும் அந்த நெல்லிக்காயுடன், இஞ்சி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்து வருவது நல்லது.
பூண்டு தினமும் ஒரு முழு பூண்டை நெருப்பில் சுட்டு சாப்பிட்டு வந்தால், வாயு பிரச்சனை நீங்குவதோடு, இரத்த குழாயில் சேரும் கொழுப்புக்கள் கரைந்து, இரத்த அழுத்தம் குறைந்து, இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
உலர் திராட்சை இதயம் எப்போதும் படபடப்பாக இருந்தால், உலர் திராட்சையை ரோஸ் வாட்டரில் ஊற வைத்து பின் அதை பிசைந்து வடிகட்டி, அந்த நீரைக் குடித்து வந்தால், படபடப்பு குறைவதோடு, பலவீனமாக உள்ள இதயமும் வலிமையடையும்.
இஞ்சி இஞ்சியை ஜூஸ் செய்தோ அல்லது துவையல் செய்தோ சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள பல்வேறு நோய்கள் நீங்கும். அதிலும் இரத்த அழுத்தம், இதய நோய், செரிமான பிரச்சனை போன்றவை நீங்கும்.
ஆப்பிள் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். அதுவும் ஆப்பிள் உடலில் கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, இதய நோய் வராமல் தடுக்கும்.