எக்கனாமிக்ஸ் இன்டெலிஜென்ட் யூனிட்’ உலகளவில் நடத்திய ஆய்வில், அதிக செலவு பிடிக்கும் நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் 116 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தொடர்ந்து 3-வது ஆண்டாக சிங்கப்பூர் முதலிடத்தை பெறுகிறது.
இரண்டாவது இடத்தை ஸ்விட்சர்லாந்தின் ஜுரிச் நகரம் 114 புள்ளிகளுடன் பெறுகிறது. 3-வது இடத்தை ஹாங்காங் நகரமும், 4-வது இடத்தை சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவும் பிடிக்கின்றன. பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் 5-வது இடத்தை பெற்றுள்ளது. லண்டன் 6-வது இடத்தையும், நியூயார்க் 7-வது இடத்தையும் பிடிக்கின்றன.
உலகளவில் அதிக செலவு வைக்கும் நகரங்கள் பட்டியலில் பல முறை முதலிடத்தை பிடித்துள்ள ஜப்பான் தலைநகர் டோக்கியோ, இந்த முறை முதல் 10ல் இடம் பெறவில்லை. சீனாவின் பொருளாதாரத் தலைநகரான ஷாங்காய் இந்த முறை டோக்கியோவை விட அதிக செலவு பிடிக்கும் நகரங்கள் பட்டியலில் முந்தியுள்ளது.
உலகிலேயே மலிவான நகரமாக ஜாம்பியாத் தலைநகர் லுசாகா இடம் பெற்றுள்ளது. உலகளவில் குறைவான செலவு பிடிக்கும் நகரங்கள் பட்டியலில் பெங்களூருவுக்கு 2வது இடம். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவிலேயே மிகவும் காஸ்ட்லியான நகரமாக பார்க்கப்படும் மும்பை,
உலகளவில் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்திருப்பதுதான்.
உலகளவில் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்திருப்பதுதான்.
கடந்த 12 மாதங்களில், 133 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு இன்று வெளியிடப்பட்டத-