வெள்ளி, 18 மார்ச், 2016

கொடூரத்தின் உச்சம் உளவு வேலையில் ஈடுபட்டவர்களை கழுத்தில் வெடிகுண்டை கட்டி வெடிக்க செய்த ஐ.எஸ் தீவிரவாதிகள்,


bombஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய நாடாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆட்சி செய்து வருகின்றனர். உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள், தங்களுக்கு எதிராக உளவு வேலையில் ஈடுபடுபவர்களை கொடூரமான முறையில் கொலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈராக் அரசாங்கத்துக்காக தங்கள் அமைப்பை உளவு பார்த்த 6 பேரை கொலை செய்யும் வீடியோவை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் கழுத்தில் வெடிகுண்டு இணைக்கப்பட்ட கம்பியின் மூலம் முடிச்சு போடும் தீவிரவாதிகள் வெடிக்குண்டை வெடிக்க செய்து  கொலை செய்துள்ளனர்.

அடுத்ததாக அவர்களின் பிடியில் உள்ள இரண்டு போலீசாரை தலையில் சுட்டுக்கொலை செய்கின்ற காட்சிகளும் அந்த வீடியோவில் அடங்கியுள்ளன.

தங்கள் இயக்கத்தில் உள்ளவர்கள் பெயர்கள் மற்றும் விபரங்களை கசியவிட்ட குற்றம், அரசாங்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டது போன்ற குற்றங்களுக்காக அந்த ஆறு பேரையும் கொன்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக தங்கள் இயக்கத்தை உளவு பார்த்ததாக 3 பேரை இம்மாதத்தின் தொடக்கத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் படுகொலை செய்தது குறிப்பிடத்தக்கது.