முகநூல்களிலும், வாட்ஸ் ஆப்பிலும் பல் வேறு குரூப்புகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரை பயன்படுத்தி இயங்கிவருகிறது. நமது ஜமாஅத்தின் கிளை, மாவட்டங்கள், ஆதரவாளர்கள் நமது ஜமா அத்தின் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்றாலும் அதற்கு ஜமாஅத்தின் அங்கீகாரம் இல்லை என்பதை முன்னரே நாம் தெளிவுபடுத்திவிட்டோம்.
இன்னும் சிலர் நம் ஜமாஅத்திற்கு களங்கம் ஏற்படுத்த நமது ஜமாஅத் பெயரிலேயே முகநூல், வாட்ஸ் ஆப் குரூப்புகளை இயக்குகிறார்கள். உதாரணத்திற்கு tntj news forum என்கிற வாட்ஸ் ஆப் குழுமம் நமது பெயரை பயன்படுத்தி நம்மை பற்றிய அவதூறுகளையும், பொய்யான செய்திகளையும் மக்கள் மன்றத்தில் பரப்பும் வேலைகளை செய்து வருகின்றனர்.
எனவே இது போன்ற முகநூல், வாட்ஸ் ஆப் குரூப் விஷயங்களில் எச்சரிக்கையோடு இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எனவே இது போன்ற முகநூல், வாட்ஸ் ஆப் குரூப் விஷயங்களில் எச்சரிக்கையோடு இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்