சனி, 12 மார்ச், 2016

தொழுகை திருடர்கள் ஜாக்கிரதை!


கின்னஸில் இடம்பிடிக்க அல்ல தொழுகை;
சொர்க்கத்தில் இடம் பிடிக்கவே தொழுகை!
தொழுகையில் நிதானத்தை கடைபிடிப்போம்!
நாம் இருக்கும் மாதம் சங்கை மிகு ரமலான் மாதம். இந்த மாதத்தில் அல்லாஹ்வின் அருளை அதிகமதிகம் பெறுவதற்குண்டான அமல்களை நாம் செய்ய வேண்டும். ஆனால் தற்போது முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் நிலைமையே வேறு. நன்மையான காரியங்களை செய்வதாக நினைத்துக் கொண்டு மார்க்கத்திற்கு முரணான மற்றும் மார்க்கம் தடுத்த காரியங்களை வணக்க வழிபாடுகள் என்ற பெயரில் செய்து வழி தவறிப்போகும் நிலையை கண்கூடாகக் காண்கின்றோம்.
குறிப்பாக இந்த ரமலான் மாதத்தில் இரவு நேரங்களில் தொழப்படும் இரவுத் தொழுகையை எடுத்துக் கொள்வோம். 23 ரக்அத்கள் தொழுகின்றனர். இதற்கு மார்க்கத்தில் எவ்வித ஆதாரமுமில்லை என்பது ஒருபக்கம் இருக்க, அந்த தொழுகையை இவர்கள் தொழும் வேகம் இருக்கின்றதே! சுப்ஹானல்லாஹ்....
அல்லாஹ்வின் வேத வசனங்களை கேலிக்குரியதாக ஆக்கி, அல்லாஹ்வின் தூதருடைய கட்டளைகளை துச்சமாக ஆக்கி எக்ஸ்பிரஸ் வேகத்தில் இந்த தொழுகையை நிறைவேற்றுகின்றனர்.
7 நிமிடத்தில் 23 ரக் அத்கள் தொழுது ஒரு நாட்டிலுள்ள பள்ளிவாசலில் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்களாம். அந்த வீடியோக்களெல்லாம் வாட்ஸ் அப்பில் பரவுவதை நாம் காண்கின்றோம். இது குறித்து மார்க்கம் என்ன சொல்கின்றது என்ற அடிப்படை தெரியாமல் இவர்கள் இருப்பதுதான் இத்தகைய தவறான செயல்பாடுகளுக்கு காரணம்.

Related Posts: