நாள் தோறும் நாம் ஊழைத்து தேடி பெற்றுச் செலவு செய்யும் இந்த ரூபாய் நோட்டுக்களுக்கும், நாணயங்களுக்கும் உள்ள மதிப்பை நாம் அறிவோம். ஆனால், இந்திய ரூபாயில் ஒவ்வொரு நோட்டிலும் ஒவ்வொரு புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதை கவனிக்க தவறி இருப்போம்.
இந்திய வரலாற்றை பறைசாற்றும் வகையில் ரூபாய் நோட்டுக்களில் வெவ்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
5 ரூபாய் நோட்டில் விவசாயத்தின் பெருமையும், 10 ரூபாயில் விலங்குகள் பாதுகாப்புக்காக புலி, யானை, காண்டாமிருகம் அச்சிடப்பட்டுள்ளன.
20 ரூபாயில் கோவளம் கடற்கரை அழகு, 50 ரூபாயில் அரசியல் பெருமையை பறைசாற்றும் இந்திய நாடாளுமன்றமும், 100 ரூபாயில் இயற்கையின் சிறப்பான இமயமலையும் இடம்பிடித்துள்ளன.
500 ரூபாயில் சுதந்திரத்தின் பெருமையாக தண்டி யாத்திரையும் 1000 ரூபாயில் இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றை குறிக்கும் சின்னமும் அச்சிடப்பட்டுள்ளன. டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நாணயங்கள் தயாரிக்கப்படுகின்றன. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும்.
அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும். அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும்.
நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே, ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும், டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும், நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும், எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது. ஆகும்.
சரி...உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்று தெரிந்துவிடும்.