புதன், 16 மார்ச், 2016

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எங்குமே சொல்லப்படவில்லை

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் 'இந்தியனாக பிறந்த ஒவ்வொருவரும் 'பாரத் மாதா கீ ஜே' என்று சொல்ல வேண்டும் என்று மகாராஷ்ட்ராவில் பேசியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மராட்டிய மாநிலம் லட்டூரில் பேசிய அசாஸூத்தீன் உவைசி,

'மோகன் பகவத் ஷாப்! இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எங்குமே ஒவ்வொரு இந்தியனும் 'பாரத் மாதா கீ ஜே' என்ற உறுதிப் பிரமாணம் எடுக்க வேண்டும் என்று சொல்லப்படவில்லை. இது உங்களின் தனிப்பட்ட கருத்து. என் கழுத்தின் மீது கத்தி வைத்து மிரட்டி 'பாரத் மாதா கீ ஜே' என்று கூறச் சொன்னாலும் நான் கூற மாட்டேன். என்னை என்ன செய்யப் பொகிறீர்கள்? ' என்று காட்டமாக கேட்டுள்ளார்.

'பாரத் மாதா என்பது யார்?' அதற்கு என்ன உருவம்? அது எங்கு வாழ்ந்தது? என்ற ஏதாவது விபரம் இந்த தேச விரோதிகளான அரை டவுசர்களுக்கு தெரியுமா?

'பாரத் மாதா கீ ஜே' என்று சொல்லும் ஆர்எஸ்எஸ் குண்டர்கள்தான் இஸ்லாமியர்களை கொன்று குவிக்கிறார்கள்.

'பாரத் மாதா கீ ஜே' என்ற கோஷம் போடும் ஆர்எஸ்எஸ் கயவர்கள் தான் தலித்களை வெட்டி சாய்க்கிறார்கள்.

'பாரத் மாதா கீ ஜே' என்று கோஷம் போடும் இந்துத்வாவாதிகள்தான் ராணுவ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

'பாரத் மாதா கீ ஜே' என்ற கோஷம் போட்ட ஜெனரல் புரோகித் ராணுவத்திலிருந்து ஆர்டிஎக்ஸை திருடி மாலேகானில் குண்டு வெடிக்க வைத்து 50 பேரை கொன்றான். இன்று கம்பி எண்ணிக் கொண்டுள்ளான்.

'பாரத் மாதா கீ ஜே' என்ற கோஷம் போட்ட அசீமானந்தா அஜ்மீர் குண்டு வெடிப்பு, மக்கா மசூதி குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு என்று வரிசையாக நடத்தியதை ஒத்துக் கொண்டு அப்ரூவராக மாறினான்.

இப்படி தேச விரோத செயல்கள் செய்யும் அனைவருமே 'பாரத் மாதா கீ ஜே' என்று சொன்னவனாகத்தான் இருக்கிறான். தேச விரோதிகள் யார் என்பதற்கு சரியான அடையாளம் இந்த இந்துத்வாவாதிகள். தலித்தும், வன்னியரும், நாடாரும், தேவனும் ஒருவனை ஒருவன் வெட்டிக் கொண்டு சாகிறான். அவனுக்கு இந்து மதத்தின் மூலம் வழி சொல்லத் தெரியாத பண்டாரங்களும் சாமியார்களும் மக்களை பிரிக்கப் பார்க்கின்றனர்.

Source: சுவனப் பிரியன்