கோவையில் கிருஸ்துவ தேவாலயத்திற்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
கோவை காளப்பட்டி பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள தேவாலயம், புறம்போக்கு நிலத்தில் கட்டப்படுவதாக இந்து முன்னணி அமைப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 9 ஆம் தேதி தேவாலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர், பூட்டியிருந்த ஆலய கதவுகளை உடைத்து, அங்குள்ள பொருட்களை சேதப்படுத்திவிட்டு தப்பியோடி விட்டனர். இதுதொடர்பாக காவல்துறையினர் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேவாலயத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்க வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இரண்டு தரப்பினர் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் இரண்டு நிர்வாகிகள் மட்டுமே மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதிக்கப்பட்டதால், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்