திங்கள், 14 மார்ச், 2016

வங்கிகளில் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு சட்ட விழிப்புணர்வு தேவை -

தனியார் நிதி நிறுவனங்களில் மற்றும் வங்கிகளில் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு சட்ட விழிப்புணர்வு தேவை -
Legal awareness is needed for farmers who did purchase loan from private finance and banks.
கடன் பெறும் போது அக்ரிமென்ட் என்று வங்கி ஆட்கள் உங்களிடம் பல இடத்தில் பல பக்கங்களில் கையொப்பம் வாங்குவார்கள்.
பெரிய புத்தகம் போன்று உள்ள அந்த அக்ரிமென்ட் படித்து பார்க்கவே 2 மணி நேரம் ஆகும் ,அதில் கையொப்பம் போடவே 10 நிமிடங்களுக்கு மேல் ஆகும்,அவ்வளவு கையொப்பம் போட வேண்டும்.
சரி அவ்வளவு பக்கங்களில் என்ன தான் இருக்கும் என்று யாராவது படித்து பார்த்தது உண்டா ?
இல்லை வங்கி ஆட்கள் தான் உங்களை படித்து பார்க்க விட்டது உண்டா ?
வங்கியில் போதுமான ஆவணங்கள் / ஜாமீன் இருந்தால் மட்டுமே கடன் கொடுக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 50 க்கு மேற்பட்ட பக்கங்கள் கொண்ட லோன் அக்ரிமென்ட் ல ,வங்கிக்கு சாதகமாக 1000 பாயிண்டுகள் இருந்தாலும்,
கடன் பெறும் கடனாளியிடம் உரிமையை பறிக்கும் விதமாகவோ / உரிமைக்கு பங்கம் விளைவிக்கும் எண்ணத்துடனோ / உரிமைக்கு எதிராகவோ எந்த நேரத்திலும் எந்த காரணத்தாலும் வங்கி ஆட்கள் செயல்பட கூடாது.
வங்கியில் கடன் பெற்றால் காவல்துறை மூலம் வசூல் செய்யலாம் என்று நினைக்கும் மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு தேவை,
சிவில் விஷயங்களில் போலிஸ் / காவல்துறை தலையீடு செய்ய கூடாது.
லா அண்டு ஆர்டர் -LAW AND ORDER DONT INVOLVE IN CIVIL MATTER.

கிரிமினல் க்கு மட்டுமே காவல்துறை என்று நீதிமன்றம் முறை காவல்துறை தலைவருக்கு எச்சரிக்கை செய்துள்ளது.
வங்கி ஆட்கள் கடனை வசூல் செய்யும்போது ,கடனாளியால் வங்கி
ஆட்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட கூடாது என்பதற்காக மட்டுமே போலிஸ் அவர்களுக்கு பாதுகாப்பு தர மற்றபடி போலிஸ் அந்த நேரத்தில் கடனாளியிடம் எவ்வித பேச்சும் பேச கூடாது.
-சட்டம் என்ன சொல்கிறது என்று சட்டத்தை தெரிந்துகொள்ளுங்கள்.
யாருக்காவது வங்கி ஆட்களால் பாதிப்பு ஏற்ப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளலாம்.
IF ANYONE HURTS /HITS BY FINANCE / BANKING EMPLOYEES, CONTACT ME.


என்னுடைய பதிவுகளை காப்பி & பேஸ்ட் செய்ய வேண்டாம்,ஏற்கனவே காப்பி & பேஸ்ட் செய்த நபரிடம் ராயல்ட்டி கேட்டு வழக்கு தொடுத்துள்ளேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.