திங்கள், 21 மார்ச், 2016

நீரிழிவு நோய் உங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்


நமது செரிமான அமைப்பு நாம் என்ன உணவு சாப்பிட்டாலும் அதை குளுக்கோஸாக உடைக்கிறது. இந்த குளுக்கோஸ் இன்சுலின் என்ற ஹார்மோன் உதவியுடன் இரத்தத்தின் மூலம் உறிஞ்சப்படுகிறது. உடலினால் இன்சுலின் உற்பத்தி செய்ய முடியவில்லை அல்லது அதை திறம்பட பயன்படுத்த முடியவில்லை எனும் போது நீரிழிவு ஏற்படுகிறது. இது ஏன் நடக்கிறது என்பதற்கான காரணங்கள் சில உள்ளன.

அறிகுறிகள் :

சர்க்கரை நோயில், உடல் குளுகோசை உறிஞ்ச முடியாததால், நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இங்கே சில நீரிழிவு நோயை உணர்த்தும் அறிகுறிகள் சொல்லப் பட்டிருக்கின்றன

1 பசி அதிகரித்தல்

2 அடிக்கடி சிறுநீர் கழித்தல்

3. மிகவும் தாகமாக உணருதல்

4. எடை இழப்பு

5 நாள் முழுவதும் களைப்பாக உணருதல்

6. அடிக்கடி தொற்றுநோய்கள்

7 காயங்கள் குணமாவது தாமதமடைதல்

8. உயர் (அதிகமான) எரிச்சல் / மன அழுத்தம்

9 மங்கலான பார்வை (படியுங்கள் இந்த சர்க்கரை நோய் அறிகுறிகளை நீங்கள் கவனித்தீர்களா?)
sugar