திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் குறிஞ்சி மலர்ச் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது பூத்துக் குலுங்குவது பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மலர் என்பதால் இதனைக் காண்பதற்காகப் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள், ஆய்வாளர்கள் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர்.
இந்த அரிய மலரைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாகச் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.