புதன், 14 செப்டம்பர், 2016

இத்தனை கலவரம் எதற்காக? காவிரி நீர் பிரச்சனை உண்மையில் எப்படிப்பட்டது?

இத்தனை கலவரம் எதற்காக? காவிரி நீர் பிரச்சனை உண்மையில் எப்படிப்பட்டது?


1960-1980களுக்கு இடையில், காவேரி நதியில் கர்நாடக அரசு நான்கு அணைகளைக் கட்டியது. ஹேமாவதி, ஹரங்கி, கபினி மற்றும் சுவர்ணாவதி என்பவையே அவை.

காவிரி நதி:

கர்நாடகாவின் குடகுமலையில் தொடங்குகிறது காவிரி நதி. ஆறும் அதன் பிரிவுகளும், ஹாசன், மாண்டியா, மைசூரு மாவட்டங்கள் வழியாக பாய்கிறது. தர்மபுரி, ஈரோடு, கரூர், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டணம், தஞ்சாவூர் மற்றும் சில தமிழக மாவட்டங்கள் வழியாகவும் பாயும். இதில் பெரும்பாலான மாவட்டங்கள் பாசனத்திற்கு காவிரி நதியை நம்பியே இருக்கின்றன. பெங்களூரு மாவட்டமும் தனது நீர் தேவைக்கு காவிரியையே சார்ந்திருக்கிறது.

காவிரி பிரச்சனையின் சுருக்கமான வரலாறு:

1924-இல் மெட்ராஸ் மாகாணம் மற்றும் மைசூர் மாநிலத்திற்கு இடையில் நீர் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அது 1974-இல் காலாவதியானது. 1960 மற்றும் 1980களுக்கு நடுவில், காவிரியில் கர்நாடகா நான்கு அணைகளைக் கட்டியது. இதனால், நீர்வழிக்குரிய குறைந்த வழியில் உள்ள தமிழ்நாடு, நிலையற்ற நிலையில், கர்நாடகத்தைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை வந்தது. இதனால், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.

உச்சநீதிமன்றம், மே மாதம், 1990 -இல் காவிரி நீர் நடுவர் மன்றத்தை அமைக்குமாறு மத்திய அரசிற்கு வழிகாட்டியது. ஜூன் மாதம், 1991-இல், CWDT இடைநிலை உத்தரவை அளித்து, ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டுக்கு 205 tmc நீரை அளிக்க உத்தரவிட்டதால், பிரச்சனை வெடித்தது.

1990 முதல் 2013 வரை இதுதான் குறைவாகவோ, அதிகமாகவோ நடந்து வருகிறது. ஒவ்வொருமுறையும் கர்நாடகா, தமிழ்நாட்டிற்கு குறைவான நீரை திறந்துவிட்டும், அதற்கு காரணமாக எங்களது மாநிலத்தின் சேமிப்பில் போதிய நீர் இல்லை என்றும், அது எங்களுக்கே போதுமானதாக இல்லை என்றும் கூறி வருகிறது.

2007-இல், காவிரி நதிநீர் நடுவர் மன்றம் தனது கடைசி உத்தரவை அளித்தது. மொத்தமாக இருக்கும் 740 tmc தண்ணீரில், பகிர்வை பங்கிட்டு அளித்தது:

தமிழ்நாடு - 419 tmc 

கர்நாடகா - 270 tmc 

கேரளா - 30 tmc 

புதுச்சேரி- 7 tmc 

இதற்கு அப்பால், 10 tmc தண்ணீர் சுற்றுச்சூழல் நோக்கங்களுக்காகவும், 4 tmc நீர் கடலில் எப்படியாகிலும் கலந்துவிடும் என்பதாக பங்கிடப்பட்டது. இதைப்பொறுத்த வரையில், ஒவ்வொரு வருடமும் 192 tmc தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டே ஆகவேண்டும். இந்த உத்தரவு, ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் சொல்கிறது. எடுத்துக்காட்டாக, ஆகஸ்ட் மாதத்தில், கர்நாடகா, தமிழ்நாட்டிற்கு 50 tmc நீரை வழங்க வேண்டும்.

இந்த வருடம் ஏன் இவ்வளவு போராட்டம்:

இந்த வருடம், கர்நாடகா தனது நான்கு அணைகளின் நீர்த்தேக்கத்தில் 80 tmc நீர் குறைவாக இருப்பதால், தண்ணீர் தர முடியாது என்று அறிவித்துவிட்டது. இதற்கு பிறகுதான் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு தமிழகத்திற்கு நீரை வழங்கும்படி ஆணையிட்டது.

பயிர் சாகுபடிக் காலங்கள்

தமிழ்நாட்டில் சாகுபடிக் காலங்கள் மூன்று: குறுவை (ஏப்ரல் முதல் ஜூலை) சம்பா (ஆகஸ்ட் முதல் நவம்பர்) மற்றும் நவரை (டிசம்பர் முதல் மார்ச் வரை).

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போகும் போது, காவிரி பிரச்சனை தலைதூக்குகிறது. வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் அக்டோபர் மாதத்தில் பொழிய வேண்டும். ஆனாலும், அதற்கு முன்னர் அது தன் நீர் தேவைகளுக்கு கர்நாடகாவையே சார்ந்திருக்கிறது.

தெளிவற்ற மேலாண்மை யுக்தி

காவிரி நடுவர் மன்றத்தின் கூற்றுப்படி, பருவமழை பொய்க்கும் காலங்களில், தண்ணீர் சரிசமமாக பங்கிட்டுக்கொள்ளப்பட வேண்டும். ஆனால் இது நடப்பதில்லை. இரண்டு மாநிலங்களும் தனக்கு எவ்வளவு நீர் தேவை மற்றும் எவ்வளவு நீரை விட்டுக்கொடுக்க முடியும் என்பதை பொதுவாகவே அமர்ந்து பேசிக்கொள்வதில்லை

நன்றி : The News Minute, News 7

Related Posts: