மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு சாகுபடிக்கு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி பல்கலைக்கழகம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதையை உற்பத்தி செய்து அதற்கு DHARA MUSTARD HYBRID 11 என பெயர் சூட்டியுள்ளது. இந்த கடுகை வர்த்தக ரீதியாக சாகுபடி செய்ய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மரபணு மாற்றுப் பயிர்களுக்கான அனுமதியளிக்கும் குழு அனுமதி அளித்துள்ளது.
மரபணு மாற்றம் செய்யப்படாத உயர்ரக விதைகள் ஏற்கனவே, சந்தையில் கிடைக்கும்போது, இந்தியாவில் அதனைக் கொண்டு வருவதற்கான அவசியம் என்ன என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
நாட்டின் சமையல் எண்ணெய் தேவை உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக இருப்பதால், எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க மரபணு மாற்ற தொழில்நுட்பங்கள் தேவைப்படுவதாக பதிலளிக்கின்றனர் விஞ்ஞானிகள்.
ஏற்கனவே, உற்பத்தி அதிகரிப்பிற்காக, மரபணு மாற்றப்பட்ட பருத்தி ரகம் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு பெரும் இழப்பை சந்தித்த விவசாயிகளில் ஆயிரக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்டதை சுட்டிக் காட்டும் விவசாயிகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை அனுமதித்தால், பருத்தி விவசாயிகளுக்கு ஏற்பட்ட நிலைமையே தங்களுக்கும் ஏற்படும் என வேதனை தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் பாதுகாப்பானதா என்பதற்கான ஆய்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை என்றும், விதையை விற்கும் மான்சாண்டோ நிறுவனமே ஆய்வை மேற்கொண்டு வருவதாகவும் விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, மரபணு மாற்றக் கடுகு சாகுபடி குறித்து, கருத்துக் கேட்பு நடத்தப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் அரசு வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்