இறந்த முஸ்லிம் குழந்தையை மருத்துவமனையிலிருந்து எடுத்துச்செல்ல 'ஆம்புலன்ஸ்' மறுப்பு..!
இறந்த குழந்தையை வைத்துக்கொண்டு இரவெல்லாம் அழுது புலம்பிக் கொண்டிருந்த இம்ரானா...!!
ஒரிஸா'வை தொடர்ந்து உ.பி.யில் நடந்த நிகழ்வு..!!!
உத்தரப்பிரதேசத்தின் 'மீரட்' மாவட்ட மருத்துவமனையில் இறந்துவிட்ட 2 வயது குழந்தையை ஊருக்கு எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் டிரைவர் மறுத்துவிட்டதால்,
குழந்தையை பறிக்கொடுத்த தாய் இம்ரானா, இரவெல்லாம் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே அவதிப்பட்டுள்ளார்.
அடுத்த நாள் காலை சிலர் செய்த முயற்சியினால் குழந்தையின் சடலம் இம்ரானா வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக 108 ஆம்புலன்ஸ்-க்கு இம்ரானா போன் மூலம் தகவல் கொடுத்தும் கூட டிரைவர் கேட்ட ₹1500 ரூபாய், கொடுக்க முடியாததால் இரவு முழுவதும் இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல முடியாததோடு, தனிமையில் அவதிப்பட்டுள்ளார், இளம்பெண் இம்ரானா.