பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக நகரங்களில் தமிழர்களின் நிறுவனங்கள் மீது தீவிர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
பெங்களூருவை பொறுத்தவரை 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்க அரசு பெங்களூருவில் உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பதற்றமான பகுதிகளில் கவனமாக இருக்குமாறும், தங்களைச் சுற்றியுள்ள சூழலை ஆராய்ந்து எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனால் இந்த விவகாரம் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, இந்தியா மற்றும் பெங்களூரு நகரத்திற்கு விரும்பத்தகாத பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது.
Source: kaalaimalar