எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டு மின்னணு இயந்திரங்கள் கொள்முதல் செய்ய 3 ஆயிரத்து 174 கோடி ரூபாய் ஒதுக்கி, மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பயன்படுத்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை மீது காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
மேலும், வாக்குச்சீட்டு முறையை கடைப்பிடிக்கக்கோரி, குடியரசுத் தலைவரை சந்தித்தும் எதிர்க்கட்சி தலைவர்கள் மனு அளித்தனர். இதையடுத்து, யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் ஒப்புகைச் சீட்டு மின்னணு இயந்திரங்கள் கொள்முதல் செய்ய தேர்தல் ஆணையம், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இவ்வகை இயந்திரங்கள் கொள்முதல் செய்ய 3 ஆயிரத்து 174 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2019ம் ஆண்டு முதல் தேர்தல்களில் இத்தகைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.