டெல்லி பல்கலைக் கழகம், அலிகார்க் முஸ்லிம் பல்கலைக் கழகம் மற்றும் டெல்லி ஐஐடி உள்ளிட்ட 4 முக்கிய கல்வி நிறுவனங்களின் இணையதளங்கள், அடையாளம் தெரியாத நபர்களால் நேற்றிரவு முடக்கப்பட்டன.
ஹேக்கிங் செய்யப்பட்ட இணையதளங்களில், ''பாகிஸ்தான் ஜிந்தாபாத்'' என்ற வாசகம் வெளியிடப்பட்டிருந்தது. மேலும், காஷ்மீரில் பொதுமக்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத குழு ஒன்று, மத்திய கல்வி நிறுவனங்களின் இணையதளங்களை முடக்கி உள்ளதாகத் தெரிகிறது.
பாகிஸ்தானின் ரயில்வே இணையதளம் ஹேக் செய்யப்பட்டதற்கு பதிலடியாக, மத்திய கல்வி நிறுவன இணையதளங்கள் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகம், ஐஐடி புவனேஸ்வர் ஆகியவற்றின் இணையதளங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய நிலையில், டெல்லி ஐஐடி இணையதளம் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.