ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

மினரல் வாட்டர் வேண்டாம்! குழாய் நீரே போதும் எனக் கூறும் திருவாரூர் மக்கள்! April 02, 2017

மினரல் வாட்டர் வேண்டாம்! குழாய் நீரே போதும் எனக் கூறும் திருவாரூர் மக்கள்!


சுத்திகரிக்கப்பட்ட கேன் மினரல் வாட்டர் வேண்டாம். நகராட்சி சார்பில் வினியோகிக்கப்படும் குடிநீரே சிறந்தது. கேன் வாட்டர் மீதான ஆர்வத்தால், உடல் உபாதைகள் ஏற்படும் என்கின்றனர் திருவாரூர் பகுதி கிராம மக்கள்.

மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான குடிநீரை, தூய்மையாக அருந்திட வேண்டும் என்ற நோக்கில் தற்போது மினரல் வாட்டர் கேன் நுகர்வு அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் மினரல் வாட்டர் தான் விநியோகிக்கப்படுகிறது. 

இந்நிலையில் திருவாருர் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்கள், நகராட்சி நிர்வாகம் சார்பில் விநியோகிக்கபடும் குடிநீரையே பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர். 

குடிநீர் குழாய் அமைக்கப்படாத கிராமங்களில் வசிக்கும் மக்கள் போர்வெல் நீரையே குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். 

சுத்திகரிக்கப்பட்ட வாட்டர் மீதான மோகம் காரணமாக, அதனை பயன்படுத்துவோருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும், இதனை தவிர்க்க நகராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரை பயன்படுத்துவதே சிறந்தது எனவும்  ஒருசிலர் கருத்து தெரிவித்தனர். 

மேலும், கேன் மினரல் வாட்டரை பயன்படுத்துவதை விட, குடிநீர் குழாயில் வரும் நீரினை அருந்துவது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதாக திருவாரூர் பகுதி மக்கள் கூறுகின்றனர்.