நேற்று (31-03-2017) நாகை மாவட்டம், திருமருகலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்துப் பேராடியதற்காக அந்தப் பகுதி மக்கள் 120 பேரை காவல்துறை கைது செய்து, வர்ஷா திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர்.
அவர்களை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன், கைதானவர்களைப் பார்க்கச் சென்றபோது அவரைக் காவல்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இந்தச் செய்தி உள்ளே கைதாகியிருந்த ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் தெரிய வர, கேட் அருகே அனைவரும் குழுமி நின்று பேராசிரியரின் பேச்சைக் கேட்டபோது, காவல்துறை அதிகாரிகள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.