புதன், 5 ஏப்ரல், 2017

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்திற்கு மு.க.ஸ்டாலின் பதிலடி! April 04, 2017

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்திற்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!


நெடுஞ்சாலை மைல் கற்களில் உள்ள இந்தி எழுத்துகள் மீது பூசும் மையை, முகத்தில் பூசி கொள்ளுங்கள் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருப்பது வெட்ககேடு என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், கூட்டுறவு வங்கியில் பெற்ற பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராடி வந்த நிலையில், உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

மக்கள் நல பணியாளர்கள் பணி நியமனம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவது போல, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வதில் காலம் தாழ்த்தாமல் உடனே ரத்து செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதேபோல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடனை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

இந்தி எழுத்துகள் மீது மை பூசுவது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான கேள்விக்கு, மத்திய அமைச்சரே இவ்வாறு கூறி இருப்பது வெட்கப்படவேண்டியது என ஸ்டாலின் பதில் அளித்தார்.

Related Posts: