தமிழகத்தில் இன்று சேலம், ஈரோடு, நீலகிரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
06/11/2021 அன்று சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கடலூர் மற்றூம் டெல்டா மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
07ம் தேதி அன்று சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவும்
அதிகமாக மழை பதிவான இடங்கள்
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் 9 செ.மீ மழையும், பாளையங்கோட்டையில் 8 செ.மீ மழையும், குமரி மாவட்டத்தின் பெருஞ்சாணி அணையில் 7 செ.மீ, நெல்லை நாங்குநேரியில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/northeast-monsoon-tamil-nadu-weather-updates-chennai-weather-rainfall-364941/