ராஜஸ்தானில் மாடுகளை வண்டியில் ஏற்றிச்சென்ற முஸ்லீம்கள் மீது ’பசு பாதுகாப்பு படையினர்’ நடத்திய கொடூர தாக்குதலில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராஜஸ்தானின் ஆல்வார் நகர் அருகே கடந்த 1-ம் தேதியன்று இஸ்லாமியர்கள் சிலர் டெம்போவில் மாடுகளை ஏற்றிச்சென்றுள்ளனர். அப்போது, வண்டியை வழி மறித்த ’விஷ்வ இந்து பரிஷத்’ மற்றும் ’பஜ்ரங் தள் அமைப்பை’ சேர்ந்தவர்கள் வண்டியில் இருந்தவர்களை இழித்து வெளியே போட்டு இரும்பு கம்பி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது.

இதையடுத்து, தாக்குதலால் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 55 வயதான பெலுகான் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார். இதுகுறித்து பேசிய ஆல்வார் நகர் போலீசார், ‘ வீடியோ காட்சிகளின் உதவியுடன் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு வழக்கு போடப்பட்டுள்ளதாகவும்’ தெரிவித்தனர்.
மேலும், இஸ்லாமியர்கள் மாடுகளை கடத்திச்சென்றதாக ஏற்பட்ட சந்திக்கேத்தின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். மாடுகளை ஏற்றிச்சென்ற நபர்கள் முறையான ரசிதுகளை காண்பித்த பிறகும் அவர்கள் மீது கொடூரமாக தாக்கதல் நடத்தப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது