மனநலம் பாதித்தவர்களை பாதுகாக்கும் வகையிலான புதிய சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மனநலம் பாதித்தவர்களின் நலன்களைப் பேணும் வகையில் ‘மனநல சட்டம், 1987’ செயல்பட்டு வந்தது. 29 ஆண்டுகளுக்கு மேலாக அமலில் இருந்து வந்த இந்த சட்டத்தை நீக்கி விட்டு, புதிய சட்டம் இயற்ற மத்தியில் இருக்கும் பாஜக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
அதன் பலனாக, மனநல சட்டம் 2017 இயற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி மனநலம் பாதித்தவர்களை சங்கிலியால் பிணைத்து கட்டிப்போடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மன நலம் பாதித்த ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாலும் அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்படாது.
அதேபோல் மனநலம் பாதித்தவர்களுக்கு மின்சார சிகிச்சை அளிக்க தடை விதித்தும், மனநலம் பாதித்தவர்களுக்கு மருத்துவ காப்பீடு அளிக்கவும் இந்த புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.