முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி அறிவிப்பான அம்மா WIFI திட்டம் சோதனை அடிப்படையில் 5 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். சென்னை உழைப்பாளர் சிலை, திருச்சி, கோவை, சேலம் மற்றும் மதுரை நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்களிலும் இந்த திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இந்த WiFi சேவை , முதல் 20 நிமிடங்களுக்கு இலவசமாகவும் , அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு 10 ரூபாய் என கட்டணத்தை செலுத்தி சேவையை பெறலாம்.
இந்த கட்டணத்தை இணையவழியாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.