உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அரசு மருத்துவமனையில், ஆம்புலன்ஸ் வழங்காததால், தமது தாயாரின் ஆக்சிஜன் சிலிண்டரை, மகன் சுமந்து சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உடல் நிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆக்ரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. பின்னர், செயற்கை சுவாசத்திற்கான ஆக்சிஜன் சிலிண்டருடன் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
ஆனால், மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுத்துவிட்டதால், தாயாரின் ஆக்சிஜன் சிலிண்டரை வெகுநேரமாக அவரது மகன் தோளில் சுமந்தபடி நின்றார். இந்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.