குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை ஓரங்கட்ட பிரதமர் நரேந்திர மோடி மீது லாலு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
பாபர் மசூதி வழக்கில் இருந்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டவர்களை விடுவித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அப்போது அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டவர்களை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதே போன்று தினசரி அடிப்படையில் வழக்கை விசாரித்து 2 ஆண்டிற்குள் முடிக்கவும் லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவு வரவேற்கத்தக்கது என எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெஹலான் பாகவி தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் எனவும் தெஹலான் பாகவி வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை ஓரங்கட்ட, பாபர் மசூதி வழக்கில் சிபிஐ மூலம் பிரதமர் மோடி சதி செய்வதாக ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்