ராணுவத்தில் வழங்கப்படும் உணவு சரியில்லை என புகார் தெரிவித்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராணுவத்தில் வழங்கப்படும் உணவு சரியில்லை எனக் கூறி தேஜ் பகதூர் என்ற எல்லை பாதுகாப்பு படை வீரர், சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் இது குறித்து எல்லை பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தேஜ் பகதூர் தெரிவித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்பதால் அவரை பணியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து, தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தேஜ் பகதூர் யாதவ் தெரிவித்துள்ளார். உண்மையை தெரிவித்ததால், தனக்கு இந்த நிலைமை ஏற்பட்டதாக தெரிவித்துள்ள அவர், தனக்கு நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.