அதிகாலை தொழுகை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால், மொட்டை அடிக்குமாறு இஸ்லாமிய மத அமைப்பு உத்தரவிட்டிருந்த நிலையில், தானே மொட்டையடித்துக் கொண்டு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் பிரபல பாலிவுட் பாடகர் சோனு நிகம்.
இந்தி, தமிழ், தெலுங்கு, குஜராத்தி, துலு, நேபாளி உட்பட ஏராளமான மொழிகளில் திரைப்படப் பாடல்களை பாடி இருப்பவர் சோனு நிகம்.
இஸ்லாமியர்களின் அதிகாலை தொழுகையால் தானும் தூக்கத்தில் இருந்து எழுந்துகொள்ள வேண்டியிருப்பதாகவும், இந்த கட்டாய மதநடவடிக்கை எப்போது முடிவுக்கு வரும் என்றும், தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இது இஸ்லாமிய அமைப்புகளிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மேற்குவங்க சிறுபான்மை ஐக்கிய கவுன்சிலின் மூத்த நிர்வாகியான சயீத் ஷா அதேப் அலிகுதேரி, பாடகர் சோனு நிகமின் தலைக்கு மொட்டையடித்து, கிழிந்துபோன செருப்புகளை மாலையாக அணிவித்தால் 10 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், தனது தலைக்கு தானே மொட்டையடுத்துக் கொண்ட சோனு நிகம், தனக்கு மொட்டையடிப்பது பெரிய விஷயமல்ல என்றும், தான் இஸ்லாமியர்களின் எதிரி போல் சித்தரிக்கப்படுவது தவறு என்றும் குறிப்பிட்டார்.
மேலும், அதிகாலையில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவது பற்றி மட்டுமே தான் கருத்து கூறியதாகவும், அதை திரித்து பரப்புகின்றனர் என்றும் அவர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
சோனு நிகமின் கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, சோனு நிகம் தங்கள் மூன்று கட்டளையில் ஒன்றை மட்டுமே நிறைவேற்றியுள்ளதாக, மேற்குவங்க சிறுபான்மை ஐக்கிய கவுன்சிலின் மூத்த நிர்வாகி சயீத் ஷா அதேப் அலிகுதேரி கூறியுள்ளார்.