சனி, 22 ஏப்ரல், 2017

குளத்தில் உயிருக்குப் போராடியவரை காப்பாற்றாமல் செல்போனில் படமெடுத்த கொடூரம்! April 21, 2017

குளத்தில் உயிருக்குப் போராடியவரை காப்பாற்றாமல் செல்போனில் படமெடுத்த கொடூரம்!


குளத்தில் ஆழமான பகுதிக்குச் சென்ற முதியவரை காப்பாற்றாமல், அவர் மூழ்கி உயிரிழப்பதை செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் ஹாரோஹள்ளி கிராமத்தை சேர்ந்த நஞ்சப்பா என்ற முதியவர், அங்குள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்ற அந்த முதியவர், நீச்சல் தெரியாததால் கரையேற முடியாமல் தவித்தார். 

இதை பார்த்த அப்பகுதி மக்கள், அவரை காப்பாற்ற முயற்சி செய்யாமல் வேடிக்கை பார்த்தனர். மேலும், தண்ணீரில் மூழ்கி அவர் உயிரிழப்பதையும் அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். 

பின்னர் இதுகுறித்த தகவல் தீயணைப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டு, நஞ்சப்பாவின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

Related Posts: