தமிழகத்தில் 6 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வரும் என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.
இந்திரா காந்தி நூற்றாண்டு விழா மகளிர் காங்கிரஸ் சார்பில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாமல் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், அதிமுக தற்போது மூன்று அணிகளாக பிரிந்துவிட்டதால் ஆட்சி பறிபோகும் சூழல் நிலவுவதாகவும் குறிப்பிட்டார். தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவின் முயற்சி ஒருபோதும் நடக்காது என்றும் அவர் கூறினார். அதிமுக அணிகளின் போட்டி சூழல் இதேபோல் தொடர்ந்தால் அடுத்த 6 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் என்றும் குஷ்பு தெரிவித்தார்.