கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாத்தலமான பாபநாசம் மற்றும் காரையாறு பகுதிகளுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகை புரிந்தனர்.
தமிழ்நாட்டில் பல நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டதையடுத்து குடும்பத்துடன் நீர்நிலைகளுடன் கூடிய சுற்றுலாதலங்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பாபநாசம், தாமிரபரணி, தலையணை, அகஸ்தியர் அருவி, காரையாறு உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்து குவியத்தொடங்கினர்.
பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களை சோதனை சாவடிகளில் நிறுத்தி பாலித்தீன், மதுபாட்டில் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றின் தலையணையிலும், அகஸ்தியர் அருவியிலும் ஆனந்தக் குளியலில் ஈடுப்பட்டனர்.
சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளதையடுத்து போலீஸார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுப்படுத்தப்பட்டு இருந்தனர்.