சனி, 22 ஏப்ரல், 2017

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளால் இந்தியாவில் வறட்சி: அதிர்ச்சி தகவல் April 22, 2017

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளால் இந்தியாவில் வறட்சி: அதிர்ச்சி தகவல்


இந்தியாவில் நிலவும் வறட்சிக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சுற்றுச்சூழல் மாசுபாடுகளே காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

லண்டன் இம்பீரியல் கல்லூரி நடத்திய ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990-ம் ஆண்ட முதல் 2011 வரை, 74 சதவீதம் சல்பர் டைஆக்சைடு, ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், இதன் வெப்பத் தாக்கம் கிழக்கு ஆசியப் பகுதிக்கு நகர்வதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

இது இந்தியாவில் கடும் வறட்சியை ஏற்படுத்துவதுடன், பூமியின் வெப்பத்தை அதிகரித்துள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும்,  ஐரோப்பிய பகுதியில் உள்ள அனல்மின் நிலையங்களில் இருந்து அதிக அளவில் சல்பர் டைஆக்சைடு வெளியேற்றப்படுகிறது. இது அமில மழை, இதய மற்றும் நுரையீரல் நோய்கள், மரம், செடி கொடிகளின் வளர்ச்சி ஆகியவற்றை கடுமையாக பாதிக்கும் தன்மை கொண்டது. 

ஐரோப்பிய ஒன்றியத்தின் இத்தகைய மாசால் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியாவின் வடமேற்கு பகுதி தான் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வெளியேற்றப்படும் மாசுக்களால் மிக அதிக பாதிப்பை சந்திப்பது கிழக்கு ஆசிய நாடுகளே என்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts: