மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருச்சியில் வறண்ட காவிரி ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒற்றை தீர்ப்பாய மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து விவசாயிகள் கருப்புக் கொடியுடன் பேரணி நடத்தினர்.
பின்னர் வறண்ட காவிரி ஆற்றுக்குள் இறங்கிய விவசாயிகள், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். விவசாயிகளின் கோரிக்கையை, அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.