சனி, 22 ஏப்ரல், 2017

இந்திய தேசத்தை இந்தி தேசமாக்கி விடாதீர்கள்: கொந்தளிக்கும் ஸ்டாலின் April 22, 2017

இந்திய தேசத்தை இந்தி தேசமாக்கி விடாதீர்கள்: கொந்தளிக்கும் ஸ்டாலின்


இந்திய நாட்டின் ஒற்றுமையை சீர் குலைக்கும் முயற்சிகளை ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே மத்திய பாரதிய ஜனதா அரசானது செய்து வருவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் மு.க. ஸ்டாலின்.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான மு.க. ஸ்டாலின், வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில் மத்திய அரசின் இந்தி திணிப்பையும், சமஸ்கிருத திணிப்பையும் கடுமையாக தாக்கியுள்ளார். 

இது குறித்து அவர் கூறும்போது, இந்திய மண்ணின் பன்முகத்தன்மை கொண்டது என்றும், பல மொழி பேசுபவர்களும், பல பண்பாடுகளை பின்பற்றுபவர்களும், பல மதத்தை சார்ந்த மக்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கையில் இந்திய நாட்டின் ஒற்றுமையை குலைக்கும் வகையில் பாஜக அரசானது ஹிந்தி திணிப்பை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் செய்துவருவதாக கூறினார். 

மேலும் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்திற்கும் ஹிந்தியில் பெயர் வைத்தும், ஆசியர் தினத்தை குரு பூர்னிமா என்றும், ஸ்வச் பாரத் திட்டம், மன் கிபாத் உட்பட அனைத்து திட்டத்திற்கும் ஹிந்தியிலேயே பெயர் வைத்துள்ளது பாஜக அரசு. மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள வழி காட்டி கற்களிலும் ஆங்கில மொழியை அழித்துவிட்டி ஹிந்தியில் எழுதி அனைத்து மக்களின் எதிர்ப்பையும் பெற்றுள்ளது.

அனைத்திற்கும் மேலாக நாடாளுமன்றத்தில் இந்தியில் பேச, எழுத தெரிந்த உறுப்பினர்கள் இந்தியில் தான் உரையாற்ற வேண்டும் என்ற சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் இந்தி கட்டாய பாடமாக கற்ப்பிக்கப்படவும் குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இப்படி நாட்டின் ஜனநாயக அமைப்பான நாடாளுமன்றம் முதல், வருங்கால சமுதாயத்தை வளர்த்தெடுக்கும் பள்ளிகள் வரை பாஜக அரசு இந்தியை திணித்து வருவதாக ஸ்டாலின் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். 

மத்திய அரசு இந்தி திணிப்பு போக்கை கைவிடாவிட்டால் 1938ம் ஆண்டு நடைப்பெற்ற மொழிப்போரை போல மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் ஏற்படும் என்று அப்படி ஒரு போராட்டத்திற்கு மத்திய பாஜக் அரசு வித்திட வேண்டாம் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

Related Posts: