திங்கள், 11 செப்டம்பர், 2017

​ஓகேனக்கல்லில் நீர்வரத்து 30,000 கன அடியாக உயர்வு..!! September 11, 2017

​ஓகேனக்கல்லில் நீர்வரத்து 30,000 கன அடியாக உயர்வு..!!


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 

இதனால், அங்கு தொடர்ந்து பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று 9,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஆங்காங்கே ஊர்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts: