
அசாம் மாநிலத்தில் மீண்டும் கனமழை பெய்து வருவதால், சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், தெமஜி, லகிம்பூர், சொனித்பூர் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
தேசிய பேரிடர் மீட்புக்குழு சார்பாக, மீட்பு பணிக்ள தீவிரமாக நடந்து வரும் நிலையில், மழை, வெள்ளத்தால் 72 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வார இறுதியில் அஸ்ஸாமில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இதன்காரணமாக, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 5 மாவட்டங்கள் வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.