வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் தமிழகத்தில் நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகட்சமாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் 11 சென்டி மீட்டரும், குன்னூரில் தலா 9 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.