புதன், 6 செப்டம்பர், 2017

ஒடிசாவில் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41-ஆக உயர்வு..!! September 06, 2017

​ஒடிசாவில் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41-ஆக உயர்வு..!!


ஒடிசா மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் 22 மாவட்டங்களை H1N1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் நோய்த் தொற்று தாக்கியுள்ளது. 

இந்த நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, தற்போது 350-ஆக உயர்ந்துள்ளது. இதனால் மாநில சுகாதாரத்துறை நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் பன்றிக்காய்ச்சல் நோயை சமாளிப்பதற்கு தேவைப்படும் மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பில் இருப்பதால், பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என ஒடிசா அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில் அசம்பாவிதமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கான மருந்துகளை கூடுதலாக அனுப்பி வைக்குமாறு மத்திய அரசை ஒடிசா அரசு வலியுறுத்தியுள்ளது. 

Related Posts: