புதன், 6 செப்டம்பர், 2017

“மதச்சார்பற்ற இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றன” - திரிபுரா முதலமைச்சர் September 06, 2017

“மதச்சார்பற்ற இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றன” - திரிபுரா முதலமைச்சர்


இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிராகவும், இந்தியாவை இந்து நாடாக மாற்றவும் அதிக முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக் சர்க்கார் கவலை தெரிவித்துள்ளார். 

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் பேசிய அவர், இந்திய சுதந்திர போராட்டத்துக்கு துரோகம் இழைத்தவர்களும், ஆங்கிலேயர்களுக்கு கைக்கூலிகளாக இருந்தவர்களுமே நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார். 

அவர்கள்தான் இந்தியாவை இந்து ராஷ்ட்ரமாக மாற்ற துடிக்கிறார்கள் என்றும் மாணிக் சர்க்கார் விமர்சித்துள்ளளார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்து மதத்துக்கோ வேறு மதங்களுக்கோ எதிரானது அல்ல என தெரிவித்த அவர், ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டதாக இந்தியா இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். கல்வி தனியார்மயமானதால், அது வணிகமயமாகவிட்டதாகக் குறை கூறிய மாணிக் சர்க்கார், இந்த போக்கு பேரழிவை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். 

Related Posts: