சென்னையில் உள்ள 5 அரசு மருத்துவமனைகளில் இருக்கும் ஐ.சி.யு. படுக்கைகள் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டதாக கூறப்படுகிறது. அதே போன்று ஆக்ஸிஜன் உதவியுடன் அமைக்கப்பட்டிருக்கும் படுக்கைகளின் எண்ணிக்கையும் விரைவாக நிரம்பி வருகிறது. கூடுதல் படுக்கை வசதிகளை உருவாக்க தேவையான நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
https://tncovidbeds. tnega.org/ இணையத்தில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் 1766 ஆக்ஸிஜன் பெட்களில் 8 மட்டுமே தற்போது காலியாக உள்ளது. அதே போன்று மொத்தம் இருக்கும் 919 ஐ.சி.யு படுக்கைகளில் 1 மட்டுமே தற்போது காலியாக உள்ளது.
படுக்கை வசதிகளின் எண்ணிக்கையை உயர்த்த மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. ராஜீவ் காந்தி மருத்துவமனை டவர் 3-ல் அமைந்திருக்கும் 6, 7,8 மாடிகளில் கூடுதலாக 550 ஆக்ஸிஜன் லைன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஏற்கனவே 70 பயன்பாட்டில் உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. ஆரம்பத்தில் 810 இருந்த ஆக்ஸிஜன் பாய்ன்டுகள் தற்போது 1100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நோயாளிகளைக் கொண்டுவரும் ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனை மேலும் 20 ஆக்ஸிஜன் புள்ளிகளைச் சேர்த்தது. நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரத்தை நாங்கள் குறைக்க விரும்புகிறோம். வெளிநோயாளர் துறையில் 10 பேர் கொண்ட மருத்துவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் ஆம்புலன்ஸில் நுழைந்து நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிப்பார்கள், ”என்று ராஜீவ் காந்தி மருத்துவமனையின் டீன் கூறியுள்ளார்.
ஆக்ஸிஜன் பயன்பாட்டை மதிப்பிடுவதற்காக மருத்துவமனை ஒரு சுவாச பராமரிப்பு குழுவை உருவாக்கியுள்ளது. அவர்கள் ஆக்ஸிஜனைப் பாதுகாப்பதற்கான வழிகளைப் பார்ப்பார்கள், மேலும் ஒவ்வொரு தளத்திலும் உள்ள நோயாளிகளின் தேவையைத் தணிக்கை செய்வார்கள். கொரோனாவில் இருந்து குணமடையும் பெண்கள் எக்மோர் மகப்பேறு மருத்துவமனைக்கு கூடுதல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக்கில் மேலும் 500 ஆக்ஸிஜன் ஆதரவு படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக டீன் பி.பாலாஜி தெரிவித்தார். மேலும் 100 படுக்கைகள் ஐ.சி.யுவில் அதிகரிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மருத்துவ கல்வித்துறை இயக்குநரகம் 100 வெண்டிலேட்டர்களை மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.
20 படுக்கைகள் கொண்ட ஜீரோ டிலே வார்டில் ஆக்ஸிஜன் புள்ளிகளுடன் மேலும் 50 படுக்கைகளை மருத்துவமனை சேர்த்துள்ளது. தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்முயற்சி பிரிவு மற்றும் ஐ.எம்.சி.யு தரை மற்றும் முதல் தளங்களில் செயல்படும் புதிய டவர் பிளாக்கில், 2 முதல் 6 தளங்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனா சோதனை முடிவுகள் நெகடிவாக இருந்து, ஆனால் ஆக்ஸிஜன் சப்ளை வேண்டும் நோயாளிகளுக்கு சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயாளிகளும் அராசின் வழிகாட்டுதலின் படி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுவிட்டனர். எங்களின் மருத்துவகுழு கொரோனா நோயாளிகளை கண்காணித்து வர, அறுவை சிகிச்சை நிபுணர்கள் நிர்வாக வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/beds-in-government-hospitals-filling-up-fast-in-chennai-299735/