தலித் மக்கள் மீதும் சிறுபான்மை மக்கள், விளிம்பு நிலை மக்கள் மீதும் இந்துத்துவ அராஜகங்கள் நாடு முழுவதும் அதிகரித்துவருகின்றன. ஆனால் இவை குறித்து மக்களிடம் போதிய விழிப்பு இல்லை...
எனவே அகில இந்திய முஸ்லிம் மஜ்லிசே முஷாவரத் எனும் தேசிய அளவிலான முஸ்லிம் கூட்டமைப்பு, இந்த அராஜகங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைப்பதற்காக நாடு முழுவதும் பரப்புரைக் கூட்டங்கள், விளக்கக் கூட்டங்கள் நடத்துவது என்று தீர்மானித்துள்ளது.
இந்தக் கூட்டமைப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், ஜமியத்துல் உலமாயே ஹிந்த்(அர்ஷத் மதனி பிரிவு), ஜமியத்துல் அஹ்லெ ஹதீஸ், எஸ்டிபிஐ, ஏபிசிஆர்(மனித உரிமை அமைப்பு) போன்ற தேசிய அளவிலான அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
-சிராஜுல்ஹஸன்
-சிராஜுல்ஹஸன்
