உயிரை பறிக்கும் புளூவேல் இணையவிளையாட்டிற்கு மஹாராஷ்ட்ராவை சேர்ந்த சிறுவன் ஒருவன் பலியாகியாகியுள்ளார்.
Blue Whale suicide challenge எனப்படும் இணையவிளையாட்டு உலகநாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த விளையாட்டில் முகம் தெரியாத நபர் யாரோ கொடுக்கும் டாஸ்க்குகளை (Task) விளையாட்டின் பங்கேற்பாளர்கள் தினமும் செய்ய வேண்டும். நள்ளிரவில் பேய் படம் பார்ப்பது, தன்னுடைய கையை தானே பிளேடுகளால் கிழித்துக்கொள்வது, மொட்டைமாடி சுவர் மீது ஏறி நின்று பாடல் கேட்பது என மொத்தம் 50 நாட்களுக்கு வெவ்வேறு வகையான டாஸ்குககள் கொடுக்கப்படம்.
பங்கேற்பாளர்கள் தினமும் இந்த டாஸ்குகளை செல்பி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து விளையாட்டின் அட்மினுக்கு அனுப்ப வேண்டும் . ஒவ்வொரு டாஸ்கையும் முடித்த பிறகே அடுத்த டாஸ்க் கொடுக்கப்படும். இந்த விபரீத விளையாட்டில் இந்தியாவில் மும்பையை சேர்ந்த சிறுவன் ஒருவன் முதலில் உயிரிழந்தார் . இதையடுத்து கேரளா, தமிழகம், பாண்டிசேரி பல்வேறு இடங்களிலும் சிறுவர்கள் இந்த விளையாட்டால் தற்கொலை செய்துகொண்டர்.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தின் தாமோ நகரில் மேலும் ஒரு சிறுவன் இந்த விபரீத விளையாட்டால் தற்கொலை செய்துள்ளார். 11ம் வகுப்பு படித்துவரும் சாத்வீக் பாண்டே எனும் மாணவர் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். பாண்டே கடந்த சில நாட்களாகவே புளூவேல் விளையாட்டில் ஈடுபட்டு வருவதாகவும், தங்களையும் அந்த விளையாட்டில் சேரும்படி பாண்டே வற்புறுத்தியதாகவும் அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் இதுகுறித்து தீவரமாக விசாரணை நடத்திவருகின்றனர். உயிரிழந்த மாணவரின் பெற்றோர்கள் இதுகுறித்து கருத்து கூற மறுத்துவிட்டனர். சிறுவர்களின் உயிரைப்பறிக்கும் இந்த கொடூர விளையாட்டை தடை செய்ய மத்திய அரசும் பல முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும் வெவ்வேறு பெயர்களிலும், வடிவங்களிலும் இந்த விளையாட்டு இணையத்தில் பரவி மாணவர்களின் உயிரை குடித்து வருகிறது. எனவே இதுகுறித்து பெற்றோர்களும், உறவினர்களும் விழிப்புடன் இருக்குமாறு மனநல மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.