திங்கள், 4 செப்டம்பர், 2017

மத்திய அமைச்சரவை மாற்றத்தில் யார் யாருக்கு என்ன துறைகள் ஒதுக்கீடு? September 03, 2017

​மத்திய அமைச்சரவை மாற்றத்தில் யார் யாருக்கு என்ன துறைகள் ஒதுக்கீடு?


மத்திய அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகு யார் யாருக்கு என்ன துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

அமைச்சர்களும், இலாக்காக்களும்:


நிர்மலா சீதாராமன் - பாதுகாப்புத்துறை 

பொன் ராதாகிருஷ்ணன் - நிதித்துறை இணை அமைச்சர் (கூடுதல் ஒதுக்கீடு)

பியூஷ் கோயல் - ரயில்வே மற்றும் நிலக்கரித் துறை 

தர்மேந்திர பிரதான் - பெட்ரோலியத் துறை, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை. 

முக்தர் அப்பாஸ் நக்வி - சிறுபான்மை நலத்துறை 

ஆர்.கே. சிங் - மின்துறை மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் துறை

ஹர்தீப் சிங் பூரி - வீட்டு வசதித் துறை

அல்போன்ஸ் கண்ணன் தான் - சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை


சிவ் பிரதாப் சுக்லா - நிதித்துறை இணை அமைச்சர்

அஷ்வினி குமார் சவுபே - சுகாதாரத்துறை இணை அமைச்சர்

விரேந்திர குமார் - பெண்கள் குழந்தைகள் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை ஆகியவற்றின் இணை அமைச்சர்.

அனந்தகுமார் ஹெக்டே - திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறையின் இணை அமைச்சர்

கஜேந்திர சிங் ஹெகாவத் - விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர்

சத்யபால் சிங் - மனித வள மேம்பாட்டுத்துறை மற்றும் நீர் வளத்துறை