புதன், 13 செப்டம்பர், 2017

ஓட்டுனர் உரிமம் விவகாரம் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு September 12, 2017

ஓட்டுனர் உரிமம் விவகாரம் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு


புதிய வாகனம் வாங்க அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் என்ற உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

புதிய வாகனம் வாங்க அசல் ஓட்டுனர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து வாகன விற்பனை முகவர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது புதிய வாகனம் வாங்க அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள் இது தொடர்பாக 4 வாரத்திற்குள் பதிலளிக்கக்கோரி தமிழக அரசிற்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Related Posts: