வெள்ளி, 15 செப்டம்பர், 2017

ஐதராபாத்தில் நடந்த கொடூர சம்பவம் September 15, 2017

ஐதராபாத்தில் நடந்த கொடூர சம்பவம்


ஐதராபாத்தில் வாடகை வீட்டில் உயிரிழந்த சிறுவனின் உடலை, வீட்டில் வைக்க வீட்டின் உரிமையாளர் மறுத்ததால், சிறுவனின் உடலுடன் அவரது தாய் இரவு முழுவதும் வீட்டிற்கு வெளியே இருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்பூப் நகரை சேர்ந்த ஈஸ்வரம்மா அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது 10வயது மகன் சுரேஷ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். 

இதையடுத்து அவரது உடலை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர். ஆனால் வீட்டிற்குள் சிறுவனின் உடலை வைக்க வீட்டின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுவனின் உடலை வீட்டு வாசலிலேயே வைத்து கொட்டும் மழையில் அவரது தாய் இரவு முழுவதும் இருந்துள்ளார். 

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts: