
மக்கள் பணியாற்றாத சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல், ஊதியம் கோரி வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது மட்டும்தான் நடவடிக்கையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் பணியாற்றாத எம்.எல்.ஏக்கள், குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுக்குமா எனவும் நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.