ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

ரோகிங்கியா முஸ்லீம்களை திரும்ப அனுப்ப இந்தியா முயற்சி..! September 16, 2017

ரோகிங்கியா முஸ்லீம்களை திரும்ப அனுப்ப இந்தியா முயற்சி..!


இந்தியாவிலிருந்து, ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை, திரும்ப அழைத்துக் கொள்ளும்படி, மியான்மர் அரசை, இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

தென் கிழக்கு ஆசிய நாடான, மியான்மரின், ராக்கைன் மாகாணத்தில், குடியுரிமை கோரும், ரோஹிங்கியா முஸ்லிம் கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம், புத்த குழுக்களும், ராணுவமும் ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டன. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அங்கிருந்து உயிர் தப்பிய மூன்று லட்சம் பேர் வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர் . இந்தியாவுக்கு 40 ஆயிரம் அகதிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவிலிருந்து ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை திரும்ப அழைத்துக் கொள்ளும்படி, மியான்மர் அரசை இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இடையே  தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடைபெற்றதாக  வங்கதேசத்தின் ஊடக துணை செயலர் நஸ்ருல் இஸ்லாம் கூறியுள்ளார் . 

அதே போன்று ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்த வேண்டும் .பிற நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளை, திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என மியான்மர் அரசை இந்தியா வலியுறுத்தியுள்ளதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.இந்நிலையில் ரோஹிங்கியா அகதிகள் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார் .

Related Posts:

  • சாலை விபத்தில் புதுக்கோட்டை அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் தனியார் பேருந்து மோதி்யதால் மினிவேனில் சென்ற பள்ளி மாணவர்கள் 8 பேர் மற்றும் ஒட்டுனர் உள்பட 9 பேர… Read More
  • பள்ளி புறக்கணிப்பு முபட்டி 19.06.2013- குழந்தை ஏசு மெட்ரிக் பள்ளி - அன்னவாசல்   -80% முபட்டி மாணவர்கள் எவரும் பள்ளி செல்லவில்லை. கட்டண உயர்வை கண்டித்து அணைத்து மா… Read More
  • கிட்னியில் கற்கள் கிட்னி கல் என்றால் என்ன?சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த வி… Read More
  • மோடியின் பொய் பிரச்சாரங்களை நாட்டிற்கு எல்லா மதங்களையும் அனுசரித்து வழிநடத்தகூடிய பிரதமர்தேவை.ஒரு மதத்தவரை ஏற்றியும் மற்றமதத்தவரை தூற்றியும் இங்கு யாராலும் ஆட்சிசெய்துவிடமுடியாத… Read More
  • ஜமாஅத்துடன்) தொழுவது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதை விட இருபத்தைந்து மடங்கு அதிகச்சிறப்புடையதாகும்.அறிவிப்பவ… Read More